முன்னாள் துணையமைச்சர் பி.வேதமூர்த்தி உட்பட மலேசியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் 19 பேர் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் அம்மனுவைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.
பொது ஒழுங்கு, ஒழுக்கம், பொருளாதாரம், சமூக ஒற்றுமை மற்றும் தேசிய கல்வி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர் டாக்டர் ஜாகிர் என அறிவிக்கக் கோரி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர்.
தேச ஒற்றுமைக்கு எதிரானவரான ஜாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தர வசிப்பிட அனுமதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.