இலண்டன் – இந்தியா – இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் இருந்து முக்கியப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டிருக்கிறார்.
இவ்விழாவில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “மோடி எனது பெயரைப் பரிந்துரைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரலாற்றைக் கலாச்சார விழாவாகக் கொண்டாடும் இந்தத் தருணம் மிகச் சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது மிகச் சிறப்பு” என்று தெரிவித்தார்.
மேலும், அவர் இது குறித்து தனது பேஸ்புக்கில் கூறுகையில், இங்கிலாந்து ராணி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு, மருதநாயகம் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டதை அவர் இன்னும் நினைவில் வைத்திருப்பதாகவும் கமல் தெரிவித்திருக்கிறார்.