Home Featured கலையுலகம் பாலாவின் ‘நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கியது!

பாலாவின் ‘நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கியது!

914
0
SHARE
Ad

Nachiyarசென்னை – இயக்குநர் பாலாவின் அடுத்த படமான ‘நாச்சியார்’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று புதன்கிழமை தொடங்கின.

இத்திரைப்படத்தில், ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நேற்று இதன் முதல் பார்வை படம் (First look poster) இணையத்தில் வெளியானது. போஸ்டரைப் பார்த்தே பல கதைகளைச் சொல்லிவிடும் வகையில், பல கதைகளை உள்ளடக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

கைவிலங்குடன் பல் தேய்த்தபடி உட்கார்ந்திருக்கும் ஜீ.வி.பிரகாஷ், அருகே குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் ஜோதிகா என அப்படம் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.