Home Featured நாடு ஒரு வாரத்தில் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிட வேலைகள் ஆரம்பம்!

ஒரு வாரத்தில் பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டிட வேலைகள் ஆரம்பம்!

840
0
SHARE
Ad

ns-rajendran-kinrara-3பூச்சோங் – தேசிய வகை பூச்சோங் கின்றாரா தமிழ்ப் பள்ளியின் இணைக்கட்டிட வேலைகள் ஒரு சில காரணங்களினால்  காலதாமதாகி வந்த நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சுமூகமா தீர்வு காணப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒரு வார காலத்தில் வருகின்ற திங்கட்கிழமை மார்ச் 6-ஆம் தேதி முதல்  இதற்கான பணிகள் தொடங்கப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றம் காணவிருப்பதாக பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு வரைவுக் குழுத்தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன், மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

mohan-ns rajendran-kinrara tamil school-2கின்றாரா பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் என்.எஸ்.இராஜேந்திரன், டி.மோகன்,

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 27-ஆம் தேதி அவர்கள் இருவரும் இணைந்து கின்றாரா பள்ளிக்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.

டத்தோ டி.மோகன் கடந்த வாரமும் இந்தப் பள்ளிக்கு வருகை தந்து பள்ளியின் இணைக்கட்டிட பணிகள் தாமதாவதற்கான காரணங்களைக் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து, என்.எஸ்.இராஜேந்திரனோடு இணைந்து மீண்டும் இந்தப் பள்ளிக்கு வருகை தந்தார்.

mohan-ns rajendran-kinrara-3பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்தாலோசனை நடத்தும் டி.மோகன், என்.எஸ்.இராஜேந்திரன்…

இந்தப்பள்ளி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் இணைக்கட்டிடத்திற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி சில பிரச்சனைகளின் அடிப்படையில் நிறைவைற்றப்பட முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அதற்கான கட்டுமானங்களுக்கான செலவுத் தொகையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

“அதனை எல்லாம் சரி செய்து இந்தப்பள்ளிக்கு பிரதமர் அளித்த வாக்குறுதியின் படி தரமான இணைக்கட்டிடம் அமையும். வருகின்ற திங்கட்கிழமை தொடங்கி இதற்கான வேலைகள் ஆரம்பமாகின்றன” என என்.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் இந்த இணைக்கட்டிடம் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலும், காலங்கள் கடந்த காரணத்தினாலும்  அதிகரித்த செலவுத்தொகையின் அடிப்படையில் பள்ளி வாரியத்தலைவர் டத்தோஸ்ரீ ராஜேந்திரன் அவர்கள் இந்த இணைக்கட்டிடத்திற்கு 76,000 வெள்ளி வழங்க முன் வந்துள்ளார். குத்தகையாளரும் தங்களது பங்களிப்பை அளிக்கிறார்கள். மீதமுள்ள தொகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விரைவில் இந்த இணைக்கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.  இந்த வேளையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகையால் பெற்றோர்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம்  எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்ட டி.மோகன் குறிப்பிடுகையில் “பள்ளியின் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த இருந்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்த வரையில் தமிழ்பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்தி ஆய்வு செய்து அதற்கான தீர்வினை எட்டலாம்” என்றார் அவர்.

விரைவில் கட்டிட வேலைகள் ஆரம்பமாகும் என்ற செய்தி கேட்டு பூச்சோங் சுற்றுவட்டார இந்திய சமுதாயத்தினரும், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.