Home Featured நாடு “என்ன ஆதாரம் இருக்கிறது?”- ஜாகிர் நாயக்கிற்கு பெர்லிஸ் முஃப்தி வக்காலத்து!

“என்ன ஆதாரம் இருக்கிறது?”- ஜாகிர் நாயக்கிற்கு பெர்லிஸ் முஃப்தி வக்காலத்து!

866
0
SHARE
Ad

zakir-naikகோலாலம்பூர் – டாக்டர் ஜாகிர் நாயக் இந்த நாட்டிற்கே அச்சுறுத்தலானவர் என்றும், அவரது நிரந்தர வசிப்பிடத் தகுதியை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி உட்பட 19 மலேசியர்கள் நேற்று புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஜாகிர் நாயக் அச்சுறுத்தலானவர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் அஸ்ரி சைனுல் அபிடின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“இந்துக்கள் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்கள் என்பதால், அவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?” என்று அஸ்ரி சைனுல் அபிடின் நேற்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.