Home Featured தமிழ் நாடு ‘ஜெ கீழே தள்ளப்பட்டிருக்கிறார்’ – பிஎச் பாண்டியன் பரபரப்புத் தகவல்!

‘ஜெ கீழே தள்ளப்பட்டிருக்கிறார்’ – பிஎச் பாண்டியன் பரபரப்புத் தகவல்!

806
0
SHARE
Ad

P.H.Pandianசென்னை – கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர் கீழே தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என  முன்னாள் சபாநாயகரான பிஎச்.பாண்டியன் இன்று வியாழக்கிழமை பரபரப்புப் பேட்டியளித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் (சிகிச்சை நிறைவு அறிக்கை) அறிக்கையில், அவர் கீழே தள்ளிவிடப் பட்டிருக்கிறார் என்றிருப்பதாகவும் பிஎச் பாண்டியன் கூறியிருக்கிறார்.

மேலும், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறைகளில் இருந்த இரகசிய கேமராக்களை அகற்றியது யார்? அகற்றச் சொன்னது யார் ? என்றும் பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட உணவுகள், அவரது கைரேகைப் பதிவுகள் உள்ளிட்டவைகளையும் விசாரணைக் கமிஷன் வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிஎச்.பாண்டியன் வலியுறுத்தியிருக்கிறார்.