Home Featured கலையுலகம் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரஜினியின் “பாட்ஷா”

22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரஜினியின் “பாட்ஷா”

841
0
SHARE
Ad

Rajinikanth-bashaaசென்னை – 22 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் என்றாலும் இன்றுவரை ரஜினிகாந்தின் திரைப்படப் பயணத்தில் இரசிகர்களால் மறக்க முடியாத – ரஜினியின் உச்சகட்டப் படமாகப் பார்க்கப்படுவது ‘பாட்ஷா’ படம்தான்!

அதற்குப் பின்னர் வந்த எத்தனையோ ரஜினி படங்கள் பாட்ஷாவை விட பிரம்மாண்டமானதாக இருந்தாலும், வசூலில் அந்தப் படத்தைவிட கூடுதலாக கோடிக்கணக்கில் வசூலித்திருந்தாலும், பாட்ஷாவின் தாக்கமும், வீரியமும், அதன் கூர்மையான வசனங்களும் இன்றுவரை இரசிகர்களால் மீண்டும் மீண்டும் நினைவு கூரப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், பாட்ஷா படம் இன்று வெள்ளிக்கிழமை முழுவதுமாக மின்னியல் வடிவில் (டிஜிடல்) புதுப்பிக்கப்பட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் திரையீடு காண்கிறது என்பது இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு.