பெக்கானிலுள்ள பகாங் சுல்தான் அரண்மனையில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பகாங் சுல்தானின் புதல்வரும், துங்கு மக்கோத்தாவுமான துங்கு அப்துல்லா சிவகுமாருக்கு டத்தோ விருதை வழங்கி கௌரவித்தார்.
மஇகா இளைஞர் பகுதியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டிருந்த சிவகுமார் பகாங், மாநிலத்தின் காராக் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.
சிவகுமாரின் தந்தை கிருஷ்ணனும் ஒரு மஇகா தலைவராக நீண்ட காலம் மஇகாவுடன் அரசியல் ஈடுபாடு கொண்டவராவார்.
2013 முதல் சிவகுமார் சுகாதார அமைச்சரின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.