பிரதமர் துறை அமைச்சின், துணை அமைச்சரான புசியா சாலே கூறுகையில், அவர்களின் இச்செயல் மன்னிக்கத்தக்கது அல்ல என்றும், நாட்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள இந்த விவகாரத்தில் மக்கள் கேள்விகள் எழுப்புவது ஏற்கத் தக்கது அல்ல எனவும் கூறினார்.
“குற்றம் செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அதே நேரத்தில், யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். முறையான சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்துப் பேசிய பகாங் மாநில மந்திரி பெசார், டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், தாய்லாந்தில் உள்ளது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பான நீண்டகால தீர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.