Home நாடு செமினி: ராயிஸ் சுல்கிப்ளி போட்டியிட வாய்ப்புகள் உள்ளன!

செமினி: ராயிஸ் சுல்கிப்ளி போட்டியிட வாய்ப்புகள் உள்ளன!

1534
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யாத நிலையில், ராயிஸ் சுல்கிபிளிக்கு அவ்வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் பெர்சாத்து கட்சி வட்டாரம் கூறியதாக மலேசியா கினி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் ராயிஸ் போட்டியிடுவதற்கு, உலு லாங்காட் தொகுதி இளைஞர் பகுதியினர் பெருமளவில்  ஆதரவு அளிப்பதாகக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பெர்சாத்து கட்சியின் தலைவரான மொகிதீன் யாசின், இம்முறை செமினி சட்டமன்றத்தில் படித்த, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளைஞரை போட்டியில் களம் இறக்க உள்ளதாகக் கூறியிருந்தார். கடந்த வாரம், இது குறித்துப் பேசிய பிரதமர் மகாதீர், ஒரு துடிப்பான, அறிவார்ந்த மற்றும் நட்பாகப் பழகக் கூடிய வேட்பாளரைக் கட்சி போட்டியில் நிறுத்தும் எனக் கூறினார்.