Home Featured நாடு கிள்ளானில் கார்வெடிகுண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

கிள்ளானில் கார்வெடிகுண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

832
0
SHARE
Ad

bukit-amanகோலாலம்பூர் – கிள்ளானில் கார் வெடிகுண்டு மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ் அமைப்பின் சதித் திட்டத்தை, புக்கிட் அம்மான் முறியடித்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி 21 –லிருந்து பிப்ரவரி 26-ம் தேதி வரை, சிலாங்கூரில் பல்வேறு இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் 41 வயதான மலேசியர், 28 வயதான இந்தோனிசியர் உட்பட 7 ஐஎஸ் தொடர்புடைய சந்தேக நபர்களை மலேசியக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தோனிசியத் தீவிரவாதிகளில் கார் வெடிகுண்டு வைப்பதில் திறமைவாய்ந்தவர்கள் மூலம் சிரியாவில் இருக்கும் ஐஎஸ் அமைப்பு மலேசியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியிருக்கிறது.