Home Featured நாடு பாதிரியார் கடத்தல்: நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!

பாதிரியார் கடத்தல்: நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!

1227
0
SHARE
Ad

Pastor_Koh1ஷா ஆலம் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில், ரேமண்ட் கோ என்ற 62 வயதான பாதிரியார், சில மர்ம நபர்களால் கடத்தப்படுவது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அக்காணொளியின் உண்மைத் தன்மையை அறிய சிலாங்கூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இது குறித்து சிலாங்கூர் குற்றப்புலனாய்வு விசாரணைத்துறைத் தலைமை மூத்த ஆணையர் பாட்சில் அகமட் கூறுகையில், “கோ கடத்தல் பற்றிய விசாரணையில் கிடைத்திருக்கும் தகவலாக அதனை (அக்காணொளியை) பார்க்கிறோம். இப்போதைக்கு அந்தக் காணொளியின் உண்மைத் தன்மையைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது. இன்னும் ஆழமான விசாரணை தேவை” என்று ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சுமார் 2 நிமிடங்கள் 52 வினாடிகள் ஓடக்கூடிய அக்காணொளி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

காரணம், 7 வாகனங்களில் வரும் மர்ம நபர்கள் 15 பேர், ஒரே நிமிடத்திற்குள் இக்கடத்தல் சம்பவத்தை நடத்தியிருக்கின்றனர்.

இராணுவ நடவடிக்கை போல் கனக்கச்சிதமாக, மிகவும் நுணுக்கமாகத் திட்டம் தீட்டி இக்கடத்தலை அவர்கள் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்துத் தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் அளிப்பதாக முதல் கோ குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

தற்போது அதனை 100,000 ரிங்கிட்டாக அதிகரித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.