Home Featured கலையுலகம் கைது செய்யப்படுவாரா சுசித்ரா?

கைது செய்யப்படுவாரா சுசித்ரா?

857
0
SHARE
Ad

suchitra-singerசென்னை – முன்னணி நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க மற்றும் ஆபாசப் புகைப்படங்களை பின்னணிப் பாடகியான சுசித்ரா தனது டுவிட்டரில் வெளியிட்டதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேசிய லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஏ.எம் ரசூல் மைதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை  சென்னை காவல்துறையிடம் ஆணையரிடம் அளித்த புகாரில், “சுசித்ரா வெளியிட்டிருக்கும் ஆபாசப் புகைப்படங்கள், காணொளிகளால் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லக் கூடும். எனவே அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கி அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, சுசித்ரா மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரை சரிப்படுத்த தாங்கள் முயற்சி செய்து வருவதாகவும் அவரது கணவரும் நடிகருமான கார்த்திக் விளக்கமளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.