Home Featured நாடு அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய்!

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய்!

1219
0
SHARE
Ad

Lee_Chong_Wei_

இலண்டன் – ஏற்கனவே மூன்று முறை அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடிய மலேசியாவின் லீ சோங் வெய் நான்காவது முறையும் அந்த வெற்றியாளர் வாய்ப்பை அடையும் முயற்சியில் இன்று சனிக்கிழமை அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.

உலகின் முதல் நிலை ஆட்டக்காரராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் லீ சோங் வெய், உலகின் 9-வது ஆட்டக்காரரான தைவான் நாட்டின் சௌ தியன் சென் என்பவரை மூன்று கட்ட (செட்) ஆட்டங்களில் தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் நுழைந்தார்.