இதைத் தொடர்ந்து நான்காவது முறையாக அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் வெற்றியாளர் கிண்ணத்தை லீ சோங் வெய் பெறுகிறார்.
ஏற்கனவே, அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2010, 2011, 2014-ஆம் ஆண்டுகளில் வெற்றியாளர் கிண்ணத்தை லீ சோங் வெய் பெற்றிருக்கிறார்.
லீ சோங் வெய், 18-10 புள்ளிகளில் முன்னணியில் இருந்தபோது, சீனாவின் ஆட்டக்காரர் ஷி யூகி பந்தை எடுக்க முற்பட்ட ஒரு தருணத்தில் சீனா ஆட்டக்காரரின் கால் பிசகியது. இதனைத் தொடர்ந்து மருத்து உதவி பெற்ற அவர் தொடர்ந்து ஆடினார்.