Home Featured உலகம் 2 மலேசியப் படகுகளை சிறைப் பிடித்தது இந்தோனிசியா!

2 மலேசியப் படகுகளை சிறைப் பிடித்தது இந்தோனிசியா!

762
0
SHARE
Ad

Indoஜகார்த்தா – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா நீரிணையில், இந்தோனிசியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மலேசியப் படகுகளை இந்தோனிசிய கடற்படை சிறைப்பிடித்திருக்கிறது.

கேஎச்எப் 1785 மற்றும் எப்கேபிபி 1781 ஆகிய இரண்டு படகுகளும் வெவ்வேறு பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இந்தோனிசிய கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக இந்தோனிசிய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் சகாலா தெரிவித்திருக்கிறார்.

இரண்டு முறை இந்தோனிசியக் கடற்படை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தும் கூட, அந்த இரு படகுகளும் தப்பித்துச் செல்ல முயற்சி செய்ததாகவும் சகாலா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த இரு படகுகளும் போதைப் பொருட்களைக் கடத்தியிருக்கலாம் என்றும் இந்தோனிசியக் கடற்படை சந்தேகம் கொண்டிருப்பதாகவும் சகாலா குறிப்பிட்டிருக்கிறார்.