Home Featured நாடு போர் வந்தால் மலேசியா எப்படி எதிர்க்கொள்ளும்? – ஹிஷாமுடின் கருத்து!

போர் வந்தால் மலேசியா எப்படி எதிர்க்கொள்ளும்? – ஹிஷாமுடின் கருத்து!

782
0
SHARE
Ad

hishamuddinகோலாலம்பூர் – வடகொரியாவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்படாத பட்சத்தில் போர் ஏற்படும் நிலை வந்தால், மலேசியா தனது சொந்த பலத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காது என்றும், நட்பு நாடுகளுடன் இணைந்து போரை எதிர்க்கொள்ளும் என்றும் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

எம்எச்370 விமானம் மாயமான போது, அதனைக் கண்டறிய மலேசியாவுடன் தேடுதல் பணியில் இணைய, 26 நாடுகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முன்வந்ததையும் ஹிஷாமுடின் சுட்டிக் காட்டினார்.

“மாயமான விமானத்தைத் தேட நம்மிடம் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது. ஆனால் 26 நாடுகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முன்வந்தது. நாம் நிறைய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருக்கிறோம். அது தான் நம்முடைய பலம்” என்று நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஹிஷாமுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

என்றாலும், கிம் ஜோங் நம் விவகாரத்தில், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமான நிலையில் தான் போய்க்க் கொண்டிருப்பதாகவும், போர் ஏற்படும் நிலை வராது என தான் நம்புவதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.