Home Featured கலையுலகம் “பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” படத்திற்கு மலேசிய தணிக்கை வாரியம் அனுமதி!

“பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” படத்திற்கு மலேசிய தணிக்கை வாரியம் அனுமதி!

1049
0
SHARE
Ad

BBகோலாலம்பூர் – “உள்விவகாரம்” காரணமாக வெளியாவதில் சிக்கலைச் சந்தித்த, டிஸ்னி நிறுவனத்தின் “பியூட்டி அண்ட் தி பீஸ்ட்” திரைப்படத்திற்கு, மலேசியத் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.

படத்தில் செய்யப்பட்ட சிறு திருத்தம் காரணமாக, மலேசியாவில் திரையிடும் அனுமதியை அத்திரைப்படம் பெற்றிருக்கிறது.

“சிறுகாட்சி நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பெற்றோர் வழிகாட்டுதலுடன் படம் பார்க்கும் பி13 என்ற பிரிவின் கீழ் அப்படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது” என்று தணிக்கைக் குழுத் தலைவர் டத்தோ அப்துல் ஹாலிம் அப்துல் ஹமீத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கே” என்றழைக்கப்படும் ஓரினச்சேர்க்கை குறித்த காட்சி ஒன்று வெட்டப்பட்டதாக அப்துல் ஹாலிம் குறிப்பிட்டார்.