சென்னை – லண்டனைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மைக்கேல் கோர்சேலுடன் நட்புறவுடன் இருந்து வரும் ஸ்ருதிஹாசன், அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குச் செல்வதும், அவ்வப்போது ஊடகங்களின் கண்ணில் சிக்கி, அது பல ஆருடங்களாக வெளிப்படுவதையும் உலகநாயகன் கமல்ஹாசன் விரும்பவில்லை என இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில இணையதளம் ஒன்று கூறுகின்றது.
கடந்த மாதம் மும்பை விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக வலம் வந்ததும், ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் படங்களின் அடிப்படையில், மைக்கேலும், ஸ்ருதியும் ரிஷிகேசிற்குப் பயணம் மேற்கொண்டதையும் முன்னணி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
அதேவேளையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – இந்தியா கலாச்சார விழா 2017-ல், கமல்ஹாசன், மைக்கேல் கோர்சேலைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் ஊடகங்களில் அதிக அளவு கிசுகிசுக்கப்பட்டது.
#TamilSchoolmychoice
இந்நிலையில், பொதுஇடங்களில் மைக்கேலுடன் வலம் வருவது குறித்து கமல்ஹாசன், ஸ்ருதியிடம் பேசியிருப்பதாகவும் அந்த ஆங்கில இணையதளம் கூறுகின்றது.