சியோல் – ஐக்கிய நாடுகளுக்கான ஜனநாயக மக்களின் கொரிய குடியரசின் (டிபிஆர்கே) நிரந்தரப் பிரதிநியான கிம் இன் ரியோங், மலேசியாவில் கொல்லப்பட்டது டிபிஆர்கே அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரரே அல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கொலைக்கு அமெரிக்காவையும், தென்கொரியாவையும் தான் குற்றம் சாட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
டிபிஆர்கே-வின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், அமெரிக்காவும், தென்கொரியாவும் திட்டம் போட்டு இப்படி ஒரு சதியைச் செய்திருப்பதாக கிம் தெரிவித்திருக்கிறார்.
எனினும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, இரு பெண்களால், விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டவர் டிபிஆர்கே-வின் தூதரகக் கடப்பிதழ் வைத்திருந்ததை கிம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.