Home Featured தமிழ் நாடு டெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டுமென தந்தை கோரிக்கை!

டெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டுமென தந்தை கோரிக்கை!

855
0
SHARE
Ad

muthukrishnanan-14-1489463874புதுடெல்லி – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்த கொண்ட விவகாரம் தற்போது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் பத்திரிகைகளுக்கு அளித்திருக்கும் பேட்டியில், முத்துகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பிரேதப் பரிசோதனையின் காணொளிப் பதிவு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, முத்துகிருஷ்ணன் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஹோலி பண்டிகையைக் கொண்டாட தனது நண்பர்களின் அறைக்குச் சென்ற முத்துகிருஷ்ணன், அங்கு அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.