Home Featured கலையுலகம் நடிகை ஜெயசுதாவின் கணவர் மர்ம மரணம்!

நடிகை ஜெயசுதாவின் கணவர் மர்ம மரணம்!

981
0
SHARE
Ad

Jayaமும்பை – நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கப்பூர், நேற்று செவ்வாய்க்கிழமை மர்ம மரணம் அடைந்தார்.

அவர் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும், அடுக்குமாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும், அவர் இறந்தற்கான உண்மையான காரணம் பற்றிய அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

#TamilSchoolmychoice

பிரபல பாலிவுட் நடிகர் ஜிஜேந்திராவின் சகோதரர் தான் நிதின் கப்பூர். கடந்த 1985-ம் ஆண்டு ஜெயசுதாவைத் திருமணம் செய்தார். 58 வயதான நிதின் கப்பூர் ‘கலிகாலம்’, ‘மேரா பதி சிர்ப் மேரா ஹை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.