Home Featured நாடு சுதர், ரமேஷ் சகோதரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

சுதர், ரமேஷ் சகோதரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

611
0
SHARE
Ad

Kajangகாஜாங் – கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதர், ரமேஷ் என்ற சகோதரர்கள் இருவருக்கு இன்று புதன்கிழமை காலை காஜாங் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அம்னெஸ்டி அனைத்துலக மலேசியா அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி புதிய கருணை மனு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், காஜாங் சிறை நிர்வாகம் அவசர அவசரமாக இன்று புதன்கிழமை தண்டனையை நிறைவேற்றியிருப்பதற்கு அம்னெஸ்டி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, காஜாங் சிறைக்கு முன் அம்னெஸ்டி அமைப்புடன் இணைந்து எதிர்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.