Home Featured உலகம் வடகொரிய அதிபர் கிம் “மிக மிக மோசம்” – டிரம்ப் கருத்து!

வடகொரிய அதிபர் கிம் “மிக மிக மோசம்” – டிரம்ப் கருத்து!

693
0
SHARE
Ad

donald-trumpவெஸ்ட் பாம் பீஸ் (புளோரிடா) – வடகொரிய அதிபர் கிம், “மிக மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

புளோரிடாவில் உள்ள மார் அ லாகோ கேளிக்கை விடுதியில், தனது வார இறுதி விடுமுறையைக் கழிக்க வந்த டிரம்ப், நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், வடகொரிய விவகாரங்கள் குறித்து இந்த வாரம், தனது நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice