Home Featured நாடு 22 ஆண்டுகளுக்குப் பிறகு திரெங்கானுவில் திறக்கப்பட்டிருக்கும் முதல் திரையரங்கு!

22 ஆண்டுகளுக்குப் பிறகு திரெங்கானுவில் திறக்கப்பட்டிருக்கும் முதல் திரையரங்கு!

976
0
SHARE
Ad

LFSகோல திரெங்கானு – சுமார் 22 ஆண்டுகள் சினிமா திரையரங்கே இல்லாமல் இருந்த கோல திரெங்கானுவில், முதன் முதலாக பாயா பூங்கா ஸ்கொயர் என்ற இடத்தில் புதிதாக சினிபிளக்ஸ் (ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக் கொண்டு திரையரங்கு) ஒன்று திறக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

திரெங்கானு மாநில பொருளாதார மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்துடன் இணைந்து, லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் இத்திரையரங்கைத் துவங்கியிருக்கிறது.

இது குறித்து திரெங்கானு மாநில பொருளாதார மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழக நிர்வாகி சமியம் சாலே கூறுகையில்,  “எல்எஃப்எஸ் சினிமா தான் திரெங்கானுவின் முதல் நவீன, டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு. இதுவரை 6 திரைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. வரும் மே மாதத்திற்குள் மொத்தம் 11 திரைகள் திறக்கப்படும். அதில் மொத்தம் 1,631 பேர் அமரலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், வெள்ளிக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட இத்திரைகளில் மொத்தம் 3,000 பேர் படம் பார்த்திருப்பதாகவும் சமியம் சாலே தெரிவித்திருக்கிறார்.