Home Featured நாடு வடகொரிய இராணுவக் கருவிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம்: காலிட்

வடகொரிய இராணுவக் கருவிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம்: காலிட்

1113
0
SHARE
Ad

Khalid Abu Bakarஜோகூர் பாரு – கடந்த 2011-ம் ஆண்டு தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட வடகொரிய இராணுவத் தகவல் தொடர்புக் கருவிகளை மலேசியா தடுத்து வைத்திருந்த நிலையில், அதனை பியோங்யாங்கிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

குலோகாம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு தாய்லாந்து அனுப்பி வைக்கப்பட்ட 250 கிலோ இராணுவக் கருவிகளை, போர்ட் கிள்ளானில் மலேசிய அதிகாரிகள் தடுத்து வைத்தனர் என்றும் காலிட் தெரிவித்தார்.

தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட அந்த கருவிகளைப் பெற அந்நாட்டில் யாரும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததால், அதனை மலேசியாவிற்கு நுழையாமல் தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அது பியோங்யாங்கிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் காலிட் நேற்று ஜோகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

குலோகாம் என்ற நிறுவனம் மலேசியாவில் ஆயுதத் தயாரிப்பு செயல்பாடுகளில் ஈடுபடுவதாக ‘ரைட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியிருந்தது.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கோலாலம்பூரில் அனைத்துலக விமான நிலையம் 2-ல் வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம், இரு பெண்களால் கொடிய இரசாயனம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதில் இருந்து, வடகொரியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.