புதுடெல்லி – அமெரிக்காவில் குறிப்பாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் காரணம் இனவெறி பிரச்சினை தான். சட்ட ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மாநிலங்களைவியில் நேற்று திங்கட்கிழமை பேசிய அவர், அண்மைய காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது, அந்நாட்டில் நிலவி வரும் இனவெறிப் பிரச்சினை தான் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க இந்திய அரசு தொடர்ந்து உயர்மட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்றும் தெரிவித்தார்.
கடந்த மாதம், அமெரிக்காவில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்சம்பவம் நிகழ்ந்து அடுத்த சில வாரங்களில் ஹார்னிஷ் பட்டேல் என்ற இந்தியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.