Home Featured நாடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாதீர் – நஸ்ரி விவாதம்: காவல்துறை அனுமதி மறுப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாதீர் – நஸ்ரி விவாதம்: காவல்துறை அனுமதி மறுப்பு!

666
0
SHARE
Ad

Mahathir - Nazriஈப்போ – பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கும், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிசுக்கும் இடையில் நடக்கவிருந்த விவாதத்தை காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

வரும் மார்ச் 25-ம் தேதி, பேராக் மாநிலம் கோல கங்சாரில் உள்ள காத்தி என்ற இடத்தில், எம்ஆர்எஸ்எம் (Maktab Rendah Sains Mara) என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மகாதீருக்கும், நஸ்ரிக்கும் இடையில் நேரடி விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவ்விவாதத்திற்காகப் பலரும் ஆவலோடு காத்திருந்த நிலையில், பேராக் மாநில காவல்துறை, அவ்விவாதம் நடைபெற அனுமதி மறுத்துவிட்டது.

#TamilSchoolmychoice

நேற்று மார்ச் 20-ம் தேதி, பிற்பகல் 3 மணிக்குத் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர் என்றும், அமைதிப் பேரணி 2012 சட்டப்படி, குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பேராக் காவல்துறை தலைமைத் துணை ஆணையர் டத்தோ ஹஸ்னான் ஹசான் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடம் பள்ளி என்பதாலும், சில பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டும் அந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஹஸ்னான் குறிப்பிட்டிருக்கிறார்.