Home Featured உலகம் தோழியால் பதவி இழந்த தென் கொரிய அதிபர் – பொதுமக்களிடம் மன்னிப்பு!

தோழியால் பதவி இழந்த தென் கொரிய அதிபர் – பொதுமக்களிடம் மன்னிப்பு!

711
0
SHARE
Ad

Park Geun Hyeசியோல் – ஊழல் குற்றச்சாட்டு, தனது தோழி சோய் சூன் சில்லை அரசு விவகாரங்களில் தலையிட அனுமதித்தது போன்ற குற்றச்சாட்டுகளின் படி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிபர் பதவியை இழந்த தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹே, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

பதவி இழந்து 10 நாட்களுக்குப் பிறகு, சியோல் நகரில் உள்ள ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்காக வந்த பார்க், விசாரணை முடிவடைந்து வெளியே வந்தார்.

அப்போது, அங்கு குவிந்திருந்த ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம், மன்னிப்புக் கேட்ட பார்க், இந்த ஊழல் விசாரணையில் தான் முறையான ஒத்துழைப்பு அளிப்பேன் என்று உறுதி கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, ஊழல் விசாரணையின் போது தான் பேசுவதைக் காணொளியாகப் பதிவு செய்ய வேண்டாம் என அதிகாரிகளிடம் பார்க் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.