Home Featured நாடு இனி செய்தியாளர் அறையில் மட்டுமே பேட்டி – நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடு!

இனி செய்தியாளர் அறையில் மட்டுமே பேட்டி – நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடு!

723
0
SHARE
Ad

Tan_Sri_Pandikar_Amin_Mulia34கோலாலம்பூர் – மலேசிய நாடாளுமன்றத்தில் இனி செய்தியாளர்கள் நினைத்த இடத்தில் எல்லாம் பேட்டியெடுக்க முடியாது என்றும், செய்தியாளர் அறையில் மட்டும் தான் பேட்டியெடுக்க முடியும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா புதியக் கட்டுப்பாடு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் பலர் தேவையின்றி உலவிக் கொண்டிருப்பதாக நிறைய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புகார் அளிப்பதால், தான் இம்முடிவை எடுத்திருப்பதாக பண்டிகார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“சுற்றுலா வந்திருப்பதைப் போல் செய்தியாளர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன்” என்று பண்டிகார் கூறினார். மேலும், இனி செய்தியாளர் சந்திப்புக் கூட்டங்களை, நாடாளுமன்றத்தில் தரைத்தளத்தில் அதற்கென்று பிரத்தியேகமாக இருக்கும் செய்தியாளர்கள் அறையில் தான் நடத்த வேண்டும் என்றும் பண்டிகார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

எனினும், நேரத்திற்குத் தகுந்தாற் போல், இந்தக் கட்டுப்பாட்டை தான் மாற்றுவேன் என்றும் பண்டிகார் தெரிவித்தார்.