இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும், கடந்த வாரம் ஓபிஎஸ் தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளித்தார்.
ஓபிஎஸ் மனுவிற்கு சசிகலா தரப்பு இன்று மார்ச் 21-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, சசி தரப்பு இன்று அளித்த பதிலில் தங்களுக்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில் நாளை புதன்கிழமை, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பினரை தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசவிருக்கின்றது.
Comments