கோலாலம்பூர் – நாளை வியாழக்கிழமை வெளியாகயிருந்த ‘பவர் ரேஞ்சர்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்திற்கு மலேசியத் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.
பி13 (P13) பிரிவைக் கொண்டிருக்கும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ திரைப்படத்தில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படவில்லை என மலேசியாவின் டிஜிவி சினிமாஸ் நிறுவனம் கூறியிருப்பதாக ‘தி ஸ்டார்’ கூறுகின்றது.
இத்திரைப்படத்தில், யெல்லோ ரேஞ்சர் டிரினி (பெக்கி ஜி) என்ற கதாப்பாத்திரத்தில் சிறிய அளவிலான ஆபாச குறியீடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தணிக்கைக் குழுவின் ஆய்வில் அப்படிப்பட்ட குறியீடுகள் எதுவும் இல்லையென்பது உறுதியானதால், காட்சிகள் வெட்டப்படாமல் திரையிட அனுமதி வழங்கப்பட்டது.