மலேசியாவின் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றாக ஜீ தமிழ் இயங்கி வருகிறது.
மலேசியத் திரைப்பட ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
www.ZeeTamilAPAC.com/ZeeReel
இந்தப் போட்டி தொடர்பில் குறும்பட உருவாக்க பயிலரங்கம் ஒன்று நடைபெறவிருக்கிறது.
ஜீ தமிழ் குறும்படப் போட்டிக்கான அனைத்துலக நடுவர் குழுவில் இடம் பெற்றிருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய், தமிழ் தாசன், டாக்டர் விமலா பெருமாள், கே.இராஜகோபால், யாஷிர் எம் ஆகியோர் இந்தப் பயிலரங்கத்தை நடத்துவதோடு கலந்துரையாடலிலும் பங்கு பெறுவார்கள்.
ZeeTamilAPAC.com/ZeeReel
மலேசியாவின் திரைப்படக் கழகமான பினாஸ் இந்தக் குறும்படப் போட்டிக்கான இணை ஆதரவை வழங்குகிறது.
இந்தக் குறும்படப் போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்: