Home One Line P1 டிக்டோக், யூடியூப் காணொளிகளுக்கு பினாஸ் உரிமம் தேவையில்லை

டிக்டோக், யூடியூப் காணொளிகளுக்கு பினாஸ் உரிமம் தேவையில்லை

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூக ஊடக பயனர்கள், சமூக ஊடகப் பக்கங்களில் காணொளிகளைப் பதிவு செய்வதற்கு மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் வாரியத்தின் (பினாஸ்) உரிமம் தேவையில்லை என்று தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

வழக்கம் போல் காணொளிகளைப் பதிவேற்றலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

“சமூக ஊடக பயனர்கள் தற்போதுள்ள டிக்டோக், யூடியூப் போன்ற தளங்களை பயன்படுத்த உரிமம் பெறத் தேவையில்லை. உரிமத்திற்கு விண்ணப்பிக்காமல் அல்லது பினாஸ் வழக்குத் தொடுப்பதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம்போல காணொளிகளைத் தயாரிப்பது, பதிவேற்றுவதைத் தொடரலாம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்களும், திரைப்படங்களை சமூக ஊடக தளங்களில் அல்லது தொலைக்காட்சி நிலையங்களில் வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட தயாரிப்பு உரிமம் மற்றும் திரைப்பட சான்றிதழ் (SPP) க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதான ஊடக நிறுவனங்களிலிருந்து அல்லது தனிப்பட்ட ஊடகங்களிலிருந்து வந்தாலும் அதனைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் (பினாஸ்) சட்டம் 1981– ஐக் கொண்டு, எந்தவொரு நபரும் திரைப்படங்களைத் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கப்படாவிட்டால், பிரிவு 21- இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு செயல்பாட்டிலும் பங்கேற்கக்கூடாது. ” என்று அவர் கூறியிருந்தார்.

டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளில் உள்ள காணொளிகளும் இதில் இடம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சைபுடின், இந்தச் சட்டத்தின் படி, திரைப்படங்கள், குறும்படங்கள், முன்னோட்டக் காணொளிகள், ஆவணப்படங்கள், விளம்பரங்களும் அடங்கும் என்று கூறியிருந்தார்.