Home Featured நாடு ‘போட்டாக்ஸ்’ ஊசி கூடாது – அழகு நிலையங்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

‘போட்டாக்ஸ்’ ஊசி கூடாது – அழகு நிலையங்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

840
0
SHARE
Ad

botox2கோலாலம்பூர் – வாடிக்கையாளர்களுக்கு ‘போட்டாக்ஸ்’ எனப்படும் அழகு சிகிச்சை ஊசிகளைச் செலுத்தும் அழகு நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில், பிகேஆர் கோபெங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பூன் சி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதில், “10 ஊசிகள் வரையில், அதன் பாதிப்பு தெரியாது. ஆனால் 11-வது ஊசி போடும் போது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நமக்கு அது போன்ற அபாய முயற்சிகள் தேவையில்லை” என்று டாக்டர் சுப்ரா கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், அது போன்ற முறைகளை அந்தத் துறையில், நிபுணத்துவம் பெற்று அமைச்சின் அங்கீகாரம் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்றும், அழகு நிலையங்கள் அப்படிப்பட்ட சிகிச்சைகளை வழங்கக் கூடாது என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

மீறி அப்படிப்பட்ட சிகிச்சை முறைகளைச் செய்யும் அழகு நிலையங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமிருப்பதாக டாக்டர் சுப்ரா எச்சரிக்கை விடுத்தார்.