Home அரசியல் பபகொமோ ஒரு போலி வாக்காளர் – பி.கே.ஆர் கூறுகிறது

பபகொமோ ஒரு போலி வாக்காளர் – பி.கே.ஆர் கூறுகிறது

697
0
SHARE
Ad

rafizi-ramli4-june29கோலாலம்பூர், மார்ச் 22 – பபகொமோ (Papagomo) என்ற அம்னோ கட்சி சார்ந்த வலைப் பதிவாளர் ஒரு போலி வாக்காளர் என்றும், அவர் அம்பாங் மற்றும் வாங்சா மாஜு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே வாக்களிக்கக் கூடியவர் என்றும் பி.கே.ஆர் கூறுகிறது. இத்தகவலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில்,  பபகொமோவின் அடையாள அட்டையின் எண்ணைப் பயன்படுத்தி சோதனையிடும் போது கண்டறிந்ததாக  பி.கே.ஆர் கட்சியின் சார்பாக இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பி.கே.ஆர் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறுகையில், பபகொமோ என்ற வான் முகமத் அஸ்ரி இரண்டு அடையாள அட்டைகளை பயன்பாட்டில் வைத்துள்ளார். ஒன்று அவர் போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய போது உள்ள அடையாள அட்டையும், மற்றொன்று குடிமக்கள் அடையாள அட்டையையும் வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலுள்ள வாக்காளர் பெயர் பட்டியலில் சோதனை மேற்கொண்ட போது, இந்த இரண்டு அடையாள அட்டைகளும் ஒரே முகவரியிலுள்ள நபரையே குறிக்கிறது என்பதைக் கண்டறிந்தோம் .

எனவே போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பபகொமோ, அம்பாங் மற்றும் வாங்சா மாஜு ஆகிய இரு இடங்களிலும் வாக்களிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஊழல் குற்றத்திற்காக கடந்த வருடம் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நீதிமன்ற அறிக்கையும்  உறுதிப்படுத்துகிறது 

#TamilSchoolmychoice

எனவே, பபகொமோ போன்று நாட்டில் இன்னும் எத்தனை பேருக்கு இதுபோன்று இரண்டு இடங்களில் வாக்களிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

மேலும்  ரம்லி , “வான் முகமத் என்ற அந்த நபர் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவர் இரண்டு அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார் ?”  என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ” கடந்த பொதுத்தேர்தலில் அவர் இரண்டு முறை வாக்களித்திருக்கலாம். உடனடியாக தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அவர் எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலிலும் இரு முறை வாக்களிப்பார்” என்று ரபிஸி ரம்லி கூறியுள்ளார்.