Home நாடு கட்சி மாறினால் 5 மில்லியன் இழப்பீடு – வேட்பாளர்களுக்கு பிகேஆர் அதிரடி உத்தரவு!

கட்சி மாறினால் 5 மில்லியன் இழப்பீடு – வேட்பாளர்களுக்கு பிகேஆர் அதிரடி உத்தரவு!

791
0
SHARE
Ad

Steven-Choong-PKR-Tebrau-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 19 – கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற அனுபவத்தின் காரணமாக, பி.கே.ஆர் தற்போது தங்களது வேட்பாளர்களுக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை விதித்திருக்கிறது.

அதாவது, பிகேஆர் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னாலோ அல்லது தேர்தலில் வெற்றிபெற்ற பிறகோ கட்சியை விட்டு விலகும் பட்சத்தில், இழப்பீடாக 5 மில்லியன் ரிங்கிட் கட்சிக்குத் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஸ்டீவன் சூங்(படம்) கூறுகையில்,

#TamilSchoolmychoice

“பிகேஆர் சார்பான வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் பெற்றவர்கள், அதிலிருந்து பின் வாங்கக் கூடாது. அப்படி பின்வாங்குவதாக இருந்தால் கட்சிக்கு 5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகத் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலில், சில தொகுதிகளில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பிறகு தங்களை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.