Home Featured தமிழ் நாடு சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!

சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!

860
0
SHARE
Ad

Dr.Subraசென்னை – இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னை சோழா  விடுதியை வந்தடைந்தார்.

முன்னதாக இன்று காலையில் சென்னையை அடந்த மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், பிரதமர் நஜிப்பை, மலேசியக் குழுவுடன் இணைந்து வரவேற்றார்.

Samy

#TamilSchoolmychoice

டாக்டர் சுப்ராவுடன், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி.கமலநாதன் உள்ளிட்டோர் நஜிப்புக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், சோழா தங்கும் விடுதி வந்தடையும் சாலை முழுவதும் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள் ஒட்டப்பட்டு விமரிசையாகக் காட்சியளித்தன.

Najib1இந்நிலையில், இன்று இரவு தமிழ்நாட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நஜிப் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, நஜிப், அமைச்சர்கள் உள்ளிட்ட மலேசியக் குழுவினர் அனைவருக்கும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.