Home Featured நாடு உற்சாகத்தோடு நடைபெற்ற தேசிய முன்னணிக் கூட்டம்

உற்சாகத்தோடு நடைபெற்ற தேசிய முன்னணிக் கூட்டம்

787
0
SHARE
Ad

najib-bn meeting-29 march 2017கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை தனது 5 நாள் இந்திய வருகையைத் தொடங்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், அதற்கு முன்பாக நேற்றிரவு தேசிய முன்னணிக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார் (படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் பக்கம்)

மிகவும் உற்சாகத்தோடு இந்தக் கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் பங்கு கொண்டனர் என்றும் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அத்தகைய உற்சாகத்திற்கு ஒரு காரணமாகக் கருதப்படுவது, தேசிய முன்னணியே முன்வந்து நாடாளுமன்றத்தில் ஷாரியா சட்டத் திருத்தத்தை முன்மொழியும் என்ற முடிவை நஜிப் திரும்பப் பெற்றுக் கொண்டதாகும்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த நெருக்கடியும், கருத்து வேறுபாடுகளும் தற்போது களையப்பட்டு, தேசிய முன்னணி தலைவர்களிடையே நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டிருக்கிறது.

முன்னதாக நஜிப் எடுத்திருந்த இந்த முடிவுக்கு, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளிடையே பலத்த எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்திருந்தன.

நேற்று நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்கும் நஜிப் தலைமை வகித்தார்.