Home Featured நாடு மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை!

மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை!

718
0
SHARE
Ad
sultan-muhammad-v-kelantan
கோலாலம்பூர் – மலேசியாவின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் வியின் முடிசூட்டு விழா, வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வரும் ஏப்ரல் 24-ம் தேதி, காலை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா அரண்மனையில், இந்த முடிசூட்டு விழா நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர், அரச குடும்பத்தினர் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பொதுவிடுமுறைச் சட்டம் 1951-ன் கீழ், தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரேதசம் ஆகியவற்றிற்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சபா, சரவாக் மாநிலங்கள், தங்களது மாநிலச் சட்டங்களைப் பயன்படுத்தி, இந்தப் பொதுவிடுமுறையை அறிவிக்கும் படியும் கூறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2016-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், நடைபெற்ற மாநில சுல்தான்களின் சிறப்புக்  கூட்டத்தில், புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி, 15 -வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.