Home Featured தமிழ் நாடு வைகோ புழல் சிறையில்!

வைகோ புழல் சிறையில்!

771
0
SHARE
Ad

சென்னை – நேற்று சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் 2009-இல் தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிகழ்த்திய உரைக்காக, தேசத் துரோகக் குற்றச்சாட்டில், சென்னை நீதிமன்றத்தில் தானே முன்வந்து சரணடைந்த மதிமுக தலைவர் வைகோ, நீதிபதி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

vaiko-surrendering in court-03042017நீதிமன்றத்திற்கு சரணடைய வரும் வைகோ…

வைகோ பிணையில் (ஜாமீனில்) வரமுடியும் என்றாலும், அதற்கு அவர் மறுத்து விட்டார். தன் சொந்த பிணையில் அவருக்கு விடுதலை வழங்க நீதிபதியே முன்வந்தபோதும் வைகோ அதனை ஏற்க மறுத்து விட்டார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு 15 நாள் காவலில் வைக்கப்படுவார்.