Home Featured உலகம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்: மரண எண்ணிக்கை 9!

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்: மரண எண்ணிக்கை 9!

763
0
SHARE
Ad

st petersberg-train-bomb expolosion

செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் – இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும், காயமடைந்தவர்கள் சுமார் 20 பேர் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு பயங்கரவாதச் செயல் என இரஷிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பான சில அண்மைச் செய்திகள்:

  • வெடிகுண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள இரயில் தடத்தில் உள்ள சுரங்கப் பாதையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது.
  • குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே நேரத்தில் இரஷிய அதிபர் விளாடிமிர் புடினும் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருந்த காரணத்தால், பரபரப்பு கூடியிருக்கிறது.
  • செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
  • இந்தபயங்கரவாதச் செயலுக்கு நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தின் வழி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்திருக்கிறார்.

najib-condemn-twitter-st petersberg

  • இரண்டாவது வெடிகுண்டு ஒன்றும் இரயில் நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்டு, பின்னர் அந்த வெடிகுண்டு செயலிழக்கப்பட்டது.

-செல்லியல் தொகுப்பு