Home Featured நாடு பெண்கள் 9 வயதிலேயே திருமணத்திற்குத் தயார் – ஷாபுடின் சர்ச்சைப் பேச்சு!

பெண்கள் 9 வயதிலேயே திருமணத்திற்குத் தயார் – ஷாபுடின் சர்ச்சைப் பேச்சு!

757
0
SHARE
Ad

Shabudin Yahyaகோலாலம்பூர் – 9 வயதிலிருந்து 12 வயதுடைய பெண் குழந்தைகள் உடலளவில் திருமணத்திற்குத் தயாராகிவிடுவதாக தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷாபுடின் யாஹ்யா நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்ட திருத்த மசோதா நேற்று இரண்டு நாட்கள் கடும் விவாகத்திற்குப் பிறகு மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதில் குழந்தைத் திருமணம், பாலியல் வல்லுறவு செய்யப்படும் பெண்கள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

அவ்விவாதத்தில், டத்தோ ஷாபுடின் பேசுகையில், பாலியல் வல்லுறவை எதிர்கொண்ட பெண்கள், வல்லுறவு செய்தவனையே திருமணம் செய்தால், ஆரோக்கியமான மற்றும் நல்ல வாழ்வை வாழ முடியும். அப்படிப்பட்ட பெண்களுக்கு கணவன் என்று இப்படி ஒருவராவது கிடைக்கிறாரே. இது சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், குழந்தைத் திருமணம் குறித்து ஷாபுடின் பேசுகையில், “சிறுமிகள் 9 வயதிலிருந்து 12 வயதை அடையும் போது பருவமடைகின்றார்கள். அப்போது 18 வயதுப் பெண்களுக்கு இணையாக அவர்களது உடலும் தயாராகிவிடுகின்றது” என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

டத்தோ ஷாபுடினின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது நட்பு ஊடகங்களில் பொதுமக்கள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.