Home Featured தமிழ் நாடு பன்னீர் செல்வத்துக்கு வாசன் ஆதரவு

பன்னீர் செல்வத்துக்கு வாசன் ஆதரவு

814
0
SHARE
Ad

vasan-supporting-ops-rk nagar by electionசென்னை – ஜி.கே.வாசன் தலைமையேற்றிருக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் (தமாகா) ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திடீரென வாசன், ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

வாசனின் ஆதரவைப் பெறுவதற்காக அவரது இல்லத்திற்கு சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்ற வாசன், பின்னர் அவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, வாசன் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள ஓ. பன்னீர்செல்வத்துடன் வேட்பாளர் மதுசூதனன், மா.பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி ஆகியோரும் உடன் சென் றனர்.

#TamilSchoolmychoice

பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வாசன் ” நான் சுற்றுப் பயணம் செய்யும் போது பலர் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்தினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடியவர். மக்கள் மனநிலையை அறிந்து முடிவெடுப்பது மிக முக்கியமானது. அந்த வகையில் ஓ. பன்னீர்செல்வம் அணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாசன் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்குகிறார். இதன் காரணமாக ஓபிஎஸ் அணியின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.