Home உலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்தது

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்தது

524
0
SHARE
Ad

India-Sri-Lanka-Flags-Sliderஇலங்கை, மார்ச்.22- இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா சமர்ப்பித்த 7 திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்தது.

தாம் முன்வைக்கும் தீர்மானத்துக்கு போதிய ஆதரவு தேவை என்ற வகையில் இந்தியாவின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இறுதி நேரத்தில் தாம் மேற்கொள்ளவிருந்த திருத்தம் தோல்வியடைந்தபோதும் இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது. எனினும் இந்தியா மேற்கொள்ளவிருந்த திருத்தங்கள் எவை என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.