Home இந்தியா பணிந்தது இத்தாலி: இந்தியா வருகின்றனர் இத்தாலி வீரர்கள்

பணிந்தது இத்தாலி: இந்தியா வருகின்றனர் இத்தாலி வீரர்கள்

560
0
SHARE
Ad

Tamil_News_large_672496புதுடில்லி, மார்ச்.22-  இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர், இன்று இந்தியா திரும்பவுள்ளதாக தெரியவந்து உள்ளது.

கடந்த ஆண்டு பிப்வரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு மீனவர்களை, இத்தாலி கடற்படை வீரர்கள், சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக,மிஸிமிலினோ லதோர், சவ்வேதார் ஜிரோம் ஆகிய இத்தாலி வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியில் நடக்கும் தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, இவர்கள் பரோலில் செல்வதற்கு, சுப்ரீம் கோர்ட் நான்கு வாரங்கள் அனுமதித்தது.

#TamilSchoolmychoice

“ஓட்டளித்து விட்டு, அவர்கள் திரும்ப வந்து விடுவர் என, இத்தாலி தூதர், டேனியல் மன்சினி அளித்த, உத்தரவாதத்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட், அவர்களை இத்தாலி செல்ல அனுமதித்தது.

இந்நிலையில், “பரோலில் சென்ற இத்தாலி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். இந்தியாவில் நடக்கும் விசாரணையிலும், அவர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என, இத்தாலி அரசு, சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி வீரர்கள், இந்தியாவிற்குதிரும்ப வந்து விடுவர் என, இத்தாலி தூதர் உறுதி மொழி அளித்தார். இதை நம்பித் தான், அவர்களை பரோலில் செல்ல அனுமதித்தோம்.தற்போது, அவர்களை இந்தியாவுக்கு அனுப்பப் போவது இல்லை என, இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்த, உறுதிமொழியை மீறிய, இத்தாலி தூதர், டேனியன் மன்சினி, இந்தியாவிலிருந்து வெளியேற, தடை விதிக்கப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது.

இதனால், இருநாடுகளின் உறவுமுறையில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இப்பிரச்னை குறித்து இருநாடுகளும், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என, ஐ.நா. பொது செயலர் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்தனர். இந்த சூழலில், இந்த இரண்டு வீரர்களும், விசாரணைக்காக இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படுவார்கள் என, இத்தாலி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.