Home 13வது பொதுத் தேர்தல் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

515
0
SHARE
Ad

3கோலாலம்பூர், மார்ச்.22- நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் நாளை கலைக்கப்படும் என்று தினந்தோறும் ஆரூடங்கள் கூறப்பட்டு வரும் வேளையில் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சில மாநில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு தவணைக்காலம் முடிவடைந்ததால் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்  என்ற ஆருடங்கள் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் வலுத்து வருகிறது.

மலேசியா வரலாற்றிலேயே மாநில சட்டமன்றங்களின் தவணைக்காலம் முடிவடைந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்படாதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பது தேசிய முன்னணி அரசாங்கத்தை மேலும் பலவீனமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி முடித்துவிட பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.