Home Featured உலகம் சுவீடனில் பெரிய வாகனம் கொண்டு கூட்டத்தின் மீது தாக்குதல்!

சுவீடனில் பெரிய வாகனம் கொண்டு கூட்டத்தின் மீது தாக்குதல்!

805
0
SHARE
Ad

ஸ்டோக்ஹோம் – அமைதிக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான சுவீடனின் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில், பெரிய டிரக் ரக வாகனம் ஒன்று உணவகம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டு, மக்கள் நெருக்கடி மிக்க பகுதி ஒன்றில் செலுத்தப்பட்டு தாக்குதல் நடந்திருக்கிறது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கின்றனர். இதுவரையில் இரண்டு பேர் மரணமடைந்திருப்பதாக சுவீடன் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

sweden-stockholm-truck-attack

ஸ்டோக்ஹோம் நகரின் பல்பொருள் அங்காடி வணிக வளாகம் ஒன்றிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படும் காட்சி…

நகரம் முழுவதும் பாதுகாப்புத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இரயில், பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

மக்கள் அதிகமாகக் கூடும் கடைத் தெருவுக்குள் இந்த வாகனம் செலுத்தப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பலர் பீதியில் தங்களின் பெட்டிகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி ஒளிந்ததைத் தொலைக்காட்சி செய்திகள் காட்டின.

இது பயங்கரவாதத் தாக்குதல் என சுவீடன் பிரதமர் ஸ்டெபன் லோஃபன் வர்ணித்திருக்கிறார்.