Home உலகம் ஈரோ 2020 : உக்ரேன் 2 – சுவீடன் 1; கால் இறுதிக்குச் செல்லும் 8-வது...

ஈரோ 2020 : உக்ரேன் 2 – சுவீடன் 1; கால் இறுதிக்குச் செல்லும் 8-வது குழு உக்ரேன்!

889
0
SHARE
Ad

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) : நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் உக்ரேன், சுவீடனை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறும் 8-வது குழுவாக வெற்றி வாகை சூடியது.

மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை (ஜூன் 30) அதிகாலை 3.00 மணிக்கு இந்த ஆட்டம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து சுவீடன் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து ஜெர்மனியைத் தோற்கடித்தது

#TamilSchoolmychoice

இதற்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஜெர்மனியைத் தோற்கடித்தது.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

இதில் தற்போது 8 குழுக்கள் அடுத்த கட்டமாக கால் இறுதிச் சுற்றுக்கு செல்கின்றன.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)