ஜோர்ஜ் டவுன் : அனைத்துலக அளவில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்று, எந்த அந்நிய மொழி மாணவர்களுக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பினாங்கு குளுகோரில் உள்ள தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளியான சுப்பிரமணிய பாரதி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்தோனிசியாவில் அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில், சுற்றுச் சூழல் மற்றும் பொறியியல் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.
இந்தத் தமிழ்ப் பள்ளியின் மாணவர்களான ஸ்ரீமித்ரா ஸ்ரீ கோபிநாத், நிதேஷ் தங்கராஜூ, சர்வினா தயாளன், ரசிகா விஜயகுமார், தண்ணீர்மலை முருகையா ஆகிய மாணவர்கள் இந்த விருதை வென்று சுப்பிரமணிய பாரதி தமிழ்ப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
21 நாடுகளில் இருந்து சுமார் 288 குழுக்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.